சென்னை:இந்திய அரசியலமைப்புச் தினம் ஒவ்வராண்டும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாப்படும் நிலையில் இந்த ஆண்டு நாம் 75ஆம் ஆண்டுகுள் அடியெடுத்து வைக்கபோகிறோம். இதை கொண்டாடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியாதவது, “மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கியது இந்திய அரசியலமைப்பு சட்டம். இந்தியாவை வளமான பாதையில் வழிநடத்துவது அரசியலமைப்பு சட்டம். இவ்வாறு உன்னதமான அரசியல் அமைப்பை உருவாக்கியவர், சட்ட மேதை அம்பேத்கர்.
இந்தியர்களாகிய நம்ம இயக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும். எனவே அனைவரும் இது குறித்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.