தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விஜயின் நிறம் வெளிப்பட்டுவிட்டது" - ஹெச்.ராஜா விமர்சனம் - H RAJA

"நடிகர் விஜய் பெரியாரைப் பின்பற்றட்டும், இதன்மூலம் அவர் தனது நிறத்தைக் காட்டிக் கொள்வதை வரவேற்கிறேன்" என தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தவெக விஜய் மற்றும் பாஜக ராஜா
தவெக விஜய் மற்றும் பாஜக ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 10:56 PM IST

திருச்சி:திருச்சி பாஜக அலுவலகத்தில் மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல பகுதிகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது," பாஜக அமைப்பு தேர்தல் மற்றும் கிளை கமிட்டி தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி முதல் நடைபெறும். அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் மண்டல் கமிட்டி மற்றும் மாவட்ட அமைப்புக்கும் அதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய தலைமை தேர்வு நடைபெறும்.

திமுக 62 ஆம் ஆண்டுக்கு முன்பு சென்று கொண்டிருக்கிறது. திமுகவின் அயலக அணி போதைபொருள் கடத்த மட்டுமே வைத்துள்ளனர் என்று எண்ணினோம். ஆனால் தற்போது தேச விரோத செயலாற்றும் அமைப்பாக உள்ளது. இந்தியாவின் இரு மாநிலங்கள் இல்லாமல் ஒரு இந்திய வரைபடத்தை திமுக அயலக அணியினர் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு தமிழக முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் பற்றி பேசிய பேச்சு மோசமாக உள்ளது. இது ஆளுநரை அடிப்பேன் என்று வகையில் உள்ளது. இந்த வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக எதிர்வினை ஆற்றினால் என்னவாக இருக்கும் என தெரிவித்த அவர், திமுகவின் தலைமை ஒரு கீழ்த்தரமாக உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:"விஜய் மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்பதற்காக தமிழக அரசே பேருந்துகளை வாடகைக்கு வாங்குகிறதா?" - தமிழிசை கேள்வி!

தேச விரோதிகள் கையில் தமிழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் ஆட்சியில் சிபிஐ (CBI) தவறாக பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் தற்போது எடப்பாடி தரப்பினர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருமாவளவன் பட்டியல் சமுதாய மக்களுக்கான தலைவர் அல்ல. மாற்று சமுதாயத்தினரையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், அந்நிய நாட்டின் கைக்கூலியாக தமிழகத்தில் இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் திருமாவளவனுக்கு எங்கும் செல்வாக்கு இல்லை. திமுக அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து 6 சீட் ஒதுக்கி உள்ளது.
அப்போது மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் மட்டுமே செல்வாக்கு இருந்தது. ஆனால் திருமாவளவனுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது என்பது திருமாவளவன் மற்றும் செல்வப் பெருந்தகை பேசி வருவதை காட்டுகிறது.

ரயில் விபத்துக்கள் கூடிவிட்டது என்பது தவறான தகவல். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ஆண்டுக்கு 121 விபத்துக்கள் நடந்தது. ஆனால் பாஜக ஒன்பது ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 71 விபத்துக்கள் மட்டுமே நடைபெறுகிறது. ரயில்வே துறையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டினால் நிவர்த்தி செய்யப்படும்.

தமிழகத்தில் கோவில் சொத்துக்களை அபகரிக்கும் கட்சி என்றால் அது திமுக கட்சி என்பது மாவட்டம் தோறும் நடைபெறும் செயல்கள் மூலம் தெரிய வருகிறது.

நடிகர் விஜய் பெரியாரைப் பின்பற்றட்டும், இதன்மூலம் அவர் தனது நிறத்தைக் காட்டிக் கொள்வதை வரவேற்கிறேன். புதியதாகக் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.கேரளாவில் பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் ஒரு முடிந்து போன சகாப்தம்.கஞ்சாவைப் பறிமுதல் செய்யும் தமிழக காவல்துறை வகை போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details