தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 4:06 PM IST

ETV Bharat / state

வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு... 4 பேர் முதலிடம் பெற்று சாதனை! - Agri university rank list released

TN Agri University Admission Rank List : நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார்.

துணைவேந்தர் கீதாலட்சுமி  புகைப்படம்
துணைவேந்தர் கீதாலட்சுமி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோவை: இளநிலை வேளாண் பொறியியல் மற்றும் தோட்டக்கலைத் துறை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.

துணைவேந்தர் கீதாலட்சுமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இந்த தரவரிசையின்படி 33 ஆயிரத்து 973 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 29 ஆயிரத்து 969 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் 11,447 பேர் மாணவர்கள் மற்றும் 18,522 பேர் மாணவிகள் ஆவர். கடந்த 2021ஆம் ஆண்டு முதல், மாணவர்கள் முழுமையான மதிப்பெண்ணான 200க்கு 200 பெற்றுவரும் நிலையில், இந்த ஆண்டும் 4 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். திவ்யா, ஷர்மிளா, மவுரின், நவீனா ஆகிய நான்கு மாணவிகள் முழு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

மேலும், நடப்பாண்டில் 318 மாணவர்கள் 195 கட் ஆப் மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் 10,053 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 413 பேருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்படும்.

அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில புலமையை அதிகப்படுத்தும் வகையில், ஆங்கில சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும். அதுபோல் வெளிமாநிலத்தில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தால் தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்.

மேலும், வேளாண் பலகலைக்கழகத்தில் பயின்றவர்கள் இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அதிகம் வெற்றி பெறுகின்றனர்" என்று கீதாலட்சுமி தெரிவித்தார். வரும் ஜூன்.22ஆம் தேதி முதல் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 5 பேர் பலி? - காவல்துறை மறுப்பு; அரசியல் தலைவர்கள் விமர்சனம்! - Kallakurichi Illicit alcohol issue

ABOUT THE AUTHOR

...view details