ETV Bharat / state

'குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை': ஈஷா அறக்கட்டளை விளக்கம் - Isha Yoga Foundation clarified

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

"மனுதாரர் காமராஜ் பொய்யாக குறிப்பிட்டதை போன்று ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என ஈஷா அறக்கட்டளை எச்சரித்துள்ளது.

கோவை ஈஷா யோகா மையம் (கோப்புப் படம்)
கோவை ஈஷா யோகா மையம் (கோப்புப் படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

கோவை: கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள காமராஜ் உள்ளிட்டோர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனது இரு மகள்கள் கோவை ஈஷா யோகா மையத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்திருப்பதாகவும், தனது மகள்களை மீட்டுத் தருமாறும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், கோவை ஈஷா யோகா மையத்தில் ஆய்வு செய்து அந்த யோகா மையம் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பது குறித்து சமூகநலத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், ஈஷா யோகா மையத்தில் காவல்துறை உள்ளடக்கிய ஆறு குழுவினர் இன்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த விசாரணை குறித்து ஈஷா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈஷா அறக்கட்டளை சத்குருவால் யோகா மற்றும் ஆன்மீகத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், ஞானத்தையும் வழங்கி உள்ளது. ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. ஏனெனில் இவை அனைத்தும் தனிமனித சுதந்திரம் மற்றும் விருப்பம்.

இதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என உறுதியாக நம்புகிறோம். ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்கையில் 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நவராத்திரி விழா: பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி!

பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என கோரி அவர்களின் தந்தை காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இரண்டு பிரம்மசாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்கி உள்ளதால் உறுதியாக உண்மை வெல்லும் என்று நம்புகிறோம். மேலும் இதுவரை போலியாக உருவாக்கப்பட்ட அனைத்து தேவையற்ற சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் 2016-ம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மா மதி மற்றும் மா மாயு ஆகிய இருவரையும் சந்தித்து நீதி விசாரணை நடத்தியது.

அவர்களின் அறிக்கையின் படி தீர்ப்பு அளிக்கப்பட்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் “பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை. பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுய விருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்," என்று கூறியுள்ளார்கள் என்பதை தற்போது நினைவுக் கூற விரும்புகிறோம்.

முன்னதாக, காமராஜ் ஈஷாவுக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் மற்றும் நபர்களுடன் சேர்ந்து, ஈஷா அறக்கட்டளையால் சுற்றுப்புற கிராம மற்றும் பழங்குடியின மக்களின் நன்மைக்காக கட்டப்பட்டு வரும் தகன மேடை குறித்து தொடர் பிரச்னைகளில் ஈடுபட்டு வந்தார்.

மேலும், காமராஜ் பொய்யாக குறிப்பிட்டதை போன்று ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.