ETV Bharat / state

12ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது! - pocso case - POCSO CASE

புதுக்கோட்டையில், 12ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 9:42 PM IST

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் சக்திவேல். இவர் பணிபுரியும் அதே பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு பாலியல்ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சக்திவேலை கைது செய்து, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : ஜாமீனில் எடுத்த வழக்கறிஞருக்கு கத்தி குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் துயரம்.. சேலம் அருகே ரவுடி வெறிச்செயல்!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.