ஜெருசலேம்: இஸ்ரேல் வான்வெளி பகுதிகளில் ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இஸ்ரேல் தன்னாட்டு மக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் ஏற்கெனவே எச்சரிக்கை தகவல் அனுப்பியது. இதேபோல், அமெரிக்காவும் ஈரான் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் ஜெருசலேமின் சில பகுதிகளிலும், மத்திய இஸ்ரேலிலும் பொதுமக்களை எச்சரிக்கும் சைரன்கள் (அலாரம்) ஒலிக்கப்பட்டதாக அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. இஸ்ரேல் மீது ஏற்கெனவே லெபனானில் இருந்து ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இஸ்ரேல் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது.
Israel Defense Forces tweets, " sirens sound across israel. all israeli civilians are in bomb shelters as rockets from iran are fired at israel"<="" p>— ani (@ani) October 1, 2024
இதையும் படிங்க: சீனா உடனான உறவு எப்படி உள்ளது? ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அதிர்ச்சி தகவல்!
இதற்கிடையே தெற்கு லெபனானில் குறைந்த அளவிலான தரை வழித் தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வந்த காஸா நகர் மீது இஸ்ரேல் போர்த் தொடுத்ததற்கு பதிலடியாக லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.
ஈரானால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லாக்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஓராண்டாக மோதல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் பிற்பகுதியில் இருந்து ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக ஹிஸ்புல்லா தலைவர், முக்கிய தளபதிகள் அண்மையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா, இஸ்ரேல், லெபனான் இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்