சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்களின் போது அனைத்துக் கரும்பு விவசாயிகளாலும் தொடர்ந்து கேட்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக்கொண்டாதாக கூறினார்.
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத் தொகை: வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது என்ன? - விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை
TN Agri Budget 2024: சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு 215 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக உயர்த்தி வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Published : Feb 20, 2024, 1:30 PM IST
அதன்படி, கரும்பு சாகுபடி உற்பத்திக்கான பரப்பை அதிகரிக்கவும், கரும்பு விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும், 2023-2024ஆம் ஆண்டு பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையை விட, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு டன்னுக்கு 215 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும், இதற்கென 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" வேளாண் பட்ஜெட்டில் புதிதாக அறிமுகம்!