சென்னை:சென்னை விமான நிலையத்தில் 75வது குடியரசு தின விழா முன்னிட்டு விமான நிலைய இயக்குநர் தீபக் மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினர். இதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி ஸ்ரீராம் மற்றும் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு குடியரசு தின விழாவைக் கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து முதல் முறையாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் வீரர்கள்,ஆண் வீரர்களுடன் இணைந்து விமான நிலையத்தில் தீவிரவாதி தாக்குதல் ஏற்பட்டால் அவர்களிடம் இருந்து பயணிகளை எப்படிக் காப்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினர்.
மேலும் 30 அடி உயரத்தில் இருந்து தேசியக் கொடியைப் பிடித்தபடி கயிற்றில் இறங்குதல் போன்ற வீர செயல்களைச் செய்து காட்டியதோடு மனித கோபுரம் அமைத்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வீர,பைரவா என மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி ஸ்ரீராம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது கூறியதாவது, “விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காகத் தமிழ் மொழியை மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் இதன் மூலம் பொதுமக்களிடம் அணுகுவது எளிதாக இருக்கும்.