தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடுவங்குடி தொடக்கப்பள்ளியில் சாட்டை பட பாணியில் ஆசிரியருக்கு பணியிடமாற்றம்.. பிரிய மனமில்லாமல் மழலைகள் நெகிழ்ச்சி - Mayiladuthurai GOVT SCHOOL - MAYILADUTHURAI GOVT SCHOOL

Kaduvangudi Govt school: மயிலாடுதுறை மாவட்டம், கடுவங்குடி தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்திய பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் புகைப்படம்
பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் புகைப்படம் (Credits -ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 9:33 AM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், கடுவங்குடி கிராமத்தில் 1954-லிருந்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்பள்ளிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக முருகையன் என்பவர் சேர்ந்துள்ளார்.

அப்போது, வெறும் 20 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த பள்ளியில், தற்போது 100 மாணவர்கள் வரை சேர்க்கையை உயர்த்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு (புதன்கிழமை) முன்னர் தலைமை ஆசிரியர் முருகையன் திடீரென பணி மாறுதலாகி சென்றுள்ளார். இதனையறிந்த மாணவர்கள் பள்ளியிலும் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாகவும் கூட்டமாகக் கூடி நின்று, அவரே மீண்டும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்ற வேண்டும் எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமையாசிரியர் பணியிடமாற்றத்திற்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்கள் போராடும் வீடியோ (Credits -ETV Bharat Tamil Nadu)

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த மணல்மேடு காவல்துறை ஆய்வாளர் ராஜா போராடிய மாணவர்களை அமைதிப்படுத்தி வகுப்பிற்குள் அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து, நேற்று வட்டார கல்வி அலுவலர் ஜானகி மற்றும் ஆசியர்கள், பணி மாறுதலாகி சென்ற தலைமை ஆசிரியர் முருகையனை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

அப்போது பள்ளிக்கு வந்த முருகையன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடமும், ஊர் மக்களிடமும், தனது கழுத்து எலும்புப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாலும், உடல்நிலை சரியில்லாதது மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் பணிமாறுதலாகிச் சென்றதாகவும், உடல்நிலை சரியானவுடன் அடுத்த ஆண்டு மீண்டும் பள்ளிக்கு வந்து பணியாற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

அதன் பின்னர், சிறந்த முறையில் பள்ளியையும், மாணவர்களையும் வழி நடத்திய தலைமையாசிரியர் காலில் விழுந்து சில பெற்றோர்கள், அவரை மீண்டும் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது, தலைமை ஆசிரியர் ஓராண்டுவரை அருகில் உள்ள பள்ளிக்குச் செல்வதாகவும், அடுத்த ஆண்டு நிச்சயம் இதே பள்ளிக்கு அவரை நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்றும் வட்டாரக் கல்வி அலுவலரும், ஆசிரியர்களும் உறுதி அளித்தனர். தலைமையாசிரியர் முருகையன் உடல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து மீண்டும் அவர் ஓராண்டுக்குப்பின் பள்ளிக்கு வந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கையில் அப்பகுதியினர் அவருக்கு பிரியாவிடையளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்கும்" - தேர்வுக்குழு செயலாளர் அருணலதா தகவல்

ABOUT THE AUTHOR

...view details