தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை.. மதுரை கள்ளழகருக்கு கொண்டு செல்லப்பட்டது! - Madurai Chithirai Festival - MADURAI CHITHIRAI FESTIVAL

Madurai Chithirai Festival: ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் மதுரை கள்ளழகருக்கு சாற்றுவதற்கு கொண்டு செல்லப்பட்டது.

srivilliputhur-sri-andal-flower-goes-to-madurai-chithirai-festival
ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை..மதுரை கள்ளழகருக்கு சாற்றுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 8:45 PM IST

Updated : Apr 22, 2024, 11:08 AM IST

விருதுநகர்: 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில். ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் நிகழ்வில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகளை அணிந்து கொண்டு தான் இறங்குவார். இவ்வழக்கமானது பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வருடத்திற்கான சித்திரைத் திருவிழா மதுரையில் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மலர்மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவைகள் இன்று(ஏப்.21) மதுரை கள்ளழகருக்கு சாற்றுவதற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நாளை இரவு தல்லாகுளத்தில் நடைபெறும் எதிர் சேவையின் போது, தங்கக் குதிரையில் எழுந்தருளும் கள்ளழகருக்கு, ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மலர்மாலை அணிவிக்கப்படும். அதன்பின் நாளை மறுநாள்(ஏப்.23) சித்ரா பௌர்ணமியன்று தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார். மதுரைக்கு மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிடவைகள் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியில் திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:காவல் நிலையத்தில் கவுன்சிலர் உயிரிழந்த விவகாரம்; இந்தியக் குடியரசுக் கட்சி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்! - Prisoner Died

Last Updated : Apr 22, 2024, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details