சென்னை: சென்னை எழும்பூரில் நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் கட்டிட திறப்பு விழா மற்றும் காமராஜர் சிலை திறப்பு விழா, தங்கும் விடுதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் கட்டிடத்தினை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
சபாநாயகர் அப்பாவு பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "காமராஜர் பள்ளிக்கு செல்லாமல் வேலை செய்த சிறுவர்கள் பார்த்து ஏன் பள்ளிக்கு போகவில்லை என கேட்டார் அதன் மூலம் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றபோது அங்கு வாடிய முகத்தோடு இருந்க சிறுவனிடம் கேட்டபோது அவர் தனக்கு அம்மா மட்டும் தான். அவரும் வேலைக்கு செல்வதால் காலையில் உணவு செய்யவில்லை அதனால் சாப்பிடவில்லை என பதில் சொன்னதை கேட்ட முதலமைச்சர் அன்று இரவே காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்து 72 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவுவிடம் செய்தியாளர்கள் நெல்லையில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் கல் குவாரிகள் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து அரசு மீது அறப்போர் இயக்கும் குற்றச்சாட்டுவது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, "எனக்கும், கனிமவளத்துறைக்கும் தொடர்பு கிடையாது. தொழிலுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
இதையும் படிங்க:"பிஎம்ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை ஆனால்.." - திமுக எம்.பி. கனிமொழி ட்விஸ்ட்!
அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அறப்போர் இயக்கம் நினைவூட்டுதல் கடிதம் போட்டால் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விருப்பு வெறுப்பு இல்லாமல், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் யாராக இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். சட்டம் தன் கடமையைச் செய்யும் சட்டப்படி என்ன நடவடிக்கை உண்டோ அதை அரசு எடுத்து வருகிறது. குறைபாடு இருந்தால் பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது. சுட்டிக்காட்டி இவர்கள்தான் என்று கூறினால் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மட்டும் நேரடி ஒளிபரப்பை ரத்து செய்து விடுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அப்பாவு, "இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிவிப்பில் சொல்லியபடி இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் நேரலையை முதல்வர் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதற்கு முன் எந்த அரசாவது சட்டப்பேரவை நிகழ்வை நேரலை செய்தது உண்டா?” என்று அப்பாவு கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எம்.பி கனிமொழி சாதி பெயர்களை அழைப்பிதழில் போடாதீர்கள் என வேண்டுகோள் வைத்தார்.