மதுரை: பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை சமயங்களில் ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மதுரை இருந்து பீகார் மாநில முஸாபர்பூருக்கு ஒரு வழி சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வட மாநிலம் செல்லும் ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, மதுரையில் இருந்து பீகார் மாநிலம் முஸாபர்பூருக்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை - முஸாபர்பூர் ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06114) மதுரையில் இருந்து ஆகஸ்ட் 18 அன்று இரவு 07.05 மணிக்கு புறப்பட்டு ஆகஸ்ட் 21 அன்று அதிகாலை 02.45 மணிக்கு முஸாபர்பூர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சூலூர் பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா, சிமாச்சலம் வடக்கு, விஜயநகரம், ஸ்ரீகாகுலம் ரோடு, பலாசா, பெர்ஹாம்பூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பட்ரக், பாலசோர், கரக்பூர், தன்குனி, பார்த்தமான், துர்காபூர், அசன்சோல், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசிடிஹ், ஜாஜா, கியூல், பரூணி, சமஸ்டிப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.