தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகள் கவனத்திற்கு.. கோவை - தன்பாத் சிறப்பு ரயில் செப் 28, அக் 5 இல் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - covai to dhanbad train cancelled - COVAI TO DHANBAD TRAIN CANCELLED

கோவை - தன்பாத் சிறப்பு ரயில் செப் 28, அக் 5 ஆகிய இரு தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - southern railway X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 9:33 PM IST

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் - தன்பாத் (03326) இடையே செல்லும் வாராந்திர சிறப்பு ரயிலான தன்பாத் சிறப்பு ரயில் செப் 28 மற்றும் அக்.5 ஆகிய இரு தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தையும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. அதில், வாரங்கல் - ஹசன்பத்ரி- காசிப்பேட் 'F' கேபின் - காசிப்பேட்- பல்ஹர்ஷா சேக்சன் ஆகிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோயம்புத்தூர் - தன்பாத் சிறப்பு ரயில் ரத்து முழுவதுமாக செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க :அண்ணனூர் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்! மின்சார ரயில் சேவை பாதிப்பு

கோயம்புத்தூர் - தன்பாத் : கோயம்புத்தூரில் இருந்து நண்பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், பல்ஹர்ஷா, நாக்பீர் ஜங்ஷன், கொண்டியா ஜங்ஷன், பாலகட் ஜங்ஷன், ஜபல்பூர், கட்னி, சாட்னா, பிரக்யராஜ், கயா வழியாக தன்பாத் சிறப்பு ரயிலானது சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details