கோடை விடுமுறையையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக செகந்திராபாத் - கொல்லம் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென் மத்திய ரயில்வே (SCR) அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில், 'வண்டி எண் 07193 மற்றும் 07194 செகந்திராபாத் - கொல்லம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சந்திப்பில் இருந்து இந்த ரயில், ஏப்ரல் 17ஆம் தேதி (புதன்கிழமை) புறப்படும். இதேபோல, அடுத்தடுத்து ஏப்ரல் 24, மே 01, 08, 22, 29, ஜூன் 05, 12, 19, 26 ஆகிய தேதிகளில் 11 நாட்கள் என செகந்திராபாத் சந்திப்பில் இருந்து கிளம்பி அடுத்த நாளான்று கேரளா மாநிலம் கொல்லம் சந்திப்பை அடையும்.
இதேபோல மறுமார்க்கத்தில், வண்டி எண் 07194 கேரளா மாநிலம் கொல்லம் சந்திப்பில் இருந்து கொல்லம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் மதியம் 02.30 மணிக்கு ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் கிளம்பி அடுத்த நாள் காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சந்திப்பை அடையும்.
ரயில் பெட்டி விபரங்கள்:இந்த ரயிலில் 1- ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகளும், 6- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகளும், 10- ஸ்லீப்பர் வகுப்பு பயிற்சியாளர்களுக்கான பெட்டிகளும் அமைந்திருக்கும். அதன்படி, புதன்கிழமை மாலை 6.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது, 8.10 மணியளவில் நல்கொண்டாவிலும், 11.00 மணியளவில் குண்டூரிலும், 12.25 மணியளவில் தெனாலியிலும், 3.50 மணிக்கு நெல்லூரிலும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.