தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக் கொலை - 6 பேர் கைது! - திருச்சி ரவுடி கொலை

Trichy Crime News: திருச்சியில் முன்பகை காரணமாக சரித்திரப் பதிவேடு குற்றவாளியை நேற்று (பிப்.3) கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பல, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tirchy Crime News
திருச்சியில் பட்டப்பகலில் சரித்திர பதிவேடு குற்றவாளி அரிவாளால் வெட்டிக் கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 2:00 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி உட்கோட்டம் நந்தா நகரில், ஸ்ரீரங்கம் சரித்திர பதிவேடு குற்றவாளி பரணிதரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் முன்பகை காரணமாக, பரணிதரண் வீட்டிற்குள் சக்திவேல் என்ற ஆட்டோ சக்தி, பார்த்திபன், தினேஷ்குமார் என்ற பொக்கைவாய் தினேஷ், மன்னார்சாமி, கோபாலகிருஷ்ணன், தினேஷ்குமார் என்ற மயில் தினேஷ் மற்றும் முகில்குமார் என்ற முகில் ஆகியோர் அத்துமீறி நுழைந்து, அரிவாளால் சரமாரியாகத் தாக்கியதில், பரணிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக கொள்ளிடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், பரணிதரனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், பரணிதரன் மனைவி பிரதீபா கொடுத்த புகாரின் அடிப்படையில், கொள்ளிடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படைகள் கொலைச் சம்பவத்தி ஈடுபட்ட நபர்களை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று (பிப்.3) அனைத்து நபர்களும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற ஆட்டோ சக்திக்கும், இறந்து போன பரணிதரன் என்பவருக்கும் இடையே சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சக்திவேலின் மனைவி ஆர்த்தி என்பவர் தொலைபேசி மற்றும் நேரில் பரணிதரனை அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட பரணிதரன், ஆர்த்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இது சக்திவேலிற்கு தெரிய வந்துள்ளது.

இதனால் சக்திவேல் பரணிதரன் மீது முன்விரோதம் கொண்டு, பகையை வளர்த்து வந்துள்ளார். பின்னர், தனது நண்பர்களுடன் நேற்று (பிப்.4) காரில் சென்று பரணிதரனை சரமாரியாகத் தாக்கி உள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆறு பேரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேலியே பயிரை மேய்ந்த கதை.. கோவையில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் கைது!

ABOUT THE AUTHOR

...view details