சிவகங்கை: நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அந்த வகையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி (INDIA Alliance) சார்பில், தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கலந்துக்கொண்டார்.
பின்னர், ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது, “பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களை அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். நமது பழக்கவழக்கங்களுக்கு தடை போடுவார்கள். கோயிலுக்குள் வருவதற்கும் சட்டம் போடுவார்கள். கோயிலில் கிடா வெட்டுவதற்கு, சேவலை நேர்த்திக் கடனாக செலுத்துவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். கோயிலில் சமஸ்கிருதம், மேல்தட்டு முறைகளில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூறுவார்கள்.