காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொழிற்சங்கம் அங்கீகாரம், ஊதிய உயர்வு மற்றும் போனஸ் போன்ற பல்வேறு வலியுறுத்தி 25 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 7 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பெயரில் அமைச்சர்கள் டி.ஆர்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், சி. வி.கணேசன் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
மினி வேன் விபத்து: இந்தநிலையில், இன்றும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாம்சங் ஊழியர்கள் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது சுங்குவார்சத்திரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த மினி லோடு வாகனத்தில், தொழிலாளர்கள் லிப்ட்டு கேட்டு பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.