சென்னை : அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டும் நவ 15 முதல் ஜன 16 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்) திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச 27 முதல் டிச 30 வரை மாலை 5.00 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிச 26 முதல் டிச 29 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது)
இதையும் படிங்க :தீபாவளி பண்டிகை; "கூடுதல் பேருந்துகளால் பயணிகள் சிரமமின்றி பயணம்" - மாநகர போக்குவரத்துக் கழகம்!