சென்னை:சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கள் பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை இன்று (ஆகஸ்ட் 8) ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, குளுகோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசி பொருத்திய கையுடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக அமலாக்கத் துறை சாட்சிய குற்றச்சாட்டுக்களை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்து காட்டி, குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:யூடியூபர் பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது.. காரணம் என்ன?