சென்னை:முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் அந்த ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டு வந்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து நேற்று (செப்.26) உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டது. அந்த நிபந்தைனைகளுள் தேவையில்லாத காரணங்களுக்காக வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரினாலோ, சாட்சிகளை கலைக்க முற்பட்டாலோ ஜாமின் ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:"செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானால் தமிழ்நாட்டிற்கு நல்லது".. கரூர் எம்.பி.ஜோதிமணி!