சென்னை: மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழக ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அவரை மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
பதவியில் இருக்கும் ஆளுநரை இரண்டாவது முறையாக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை என குறிப்பிட்டுள்ள மூத்த வழக்கறிஞர், ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், அவரை மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் துரைசாமி (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா? புதிய ஆளுநர் நியமிக்கும் வரை ஆர்.என்.ரவியே தமிழகத்தின் ஆளுநராக நீடிக்கச் செய்யும் திட்டம் உள்ளதா? ஆர்.என்.ரவிக்கு பிறகு புதிய ஆளுநர் நியமிக்கும் திட்டம் உள்ளதா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:"தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி தர தயங்குவது ஏன்?" - அமைச்சர் துரைமுருகன் சொல்லும் காரணம் இதுதான்!