சென்னை:நடிகை கெளதமி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஃபைனான்சியர் அழகப்பன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகை கெளதமியின் சென்னை பாலவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிலங்களை அழகப்பன் என்பவர் விற்பனை மோசடி செய்து விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கெளதமி புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அழகப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதனை எதிர்த்து, அறிவுரை குழுமம் நீதிபதிகளிடம் முறையிட்டதன் அடிப்படையில், அழகப்பன் மீதான குண்டர் சட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய நடிகை கவுதமி, தற்போது அதிமுகவில் இணைந்து, அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.81 கோடி பறிமுதல்:சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் (ஏப்.4) வாகன சோதனையில் ஈடுபட்டபோது. அவ்வழியே வந்த TN 09 BK 7779 வாகனத்தை மறித்து வாகன சோதனை செய்தனர். இதில் 1 கோடியே 81 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
பணத்தை எடுத்து வந்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கிஷ்ணமூர்த்தி, சிவகுமார் மற்றும் ஒட்டுநர் ஷேக்கலாம் என தெரியவந்த நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் பணம் தொடர்பான உரிய ஆவனங்களை கேட்டு உள்ளனார். அவர்களிடம் உரிய ஆவனங்கள் இல்லை என்பதால் உடனே வருமான வரித்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணத்தை வருமான வரித்துறை கருவூலத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
தனியார் விமான விமானியிடம் ரூ.2.11 லட்சம் மோசடி:சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனியில் வசித்து வருபவர் மனோ ரஞ்சித். இவர் தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் மனோ ரஞ்சித்திற்கு கிரெடிட் கார்டுகள் வந்திருப்பதாக கூறியுள்ளார். அதற்கு மனோ ரஞ்சித், தனக்கு எதுவும் பார்சல் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தொலைபேசியில் பேசிய நபர் வேறு ஒரு நபரை அறிமுகப்படுத்திய நிலையில், அந்த நபர் தான் மும்பை சைபர் கிரைம் போலீசில் பணிபுரிந்து வரும் விக்ரம் என்றும், சட்டவிரோதமாக கிரெடிட் கார்டு பெற்ற பிரச்சினை தீர்க்க வங்கி கணக்கு மூலம் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 653 பணம் அனுப்பும்படி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன விமானி மனோரஞ்சித், தனது வங்கி கணக்கில் இருந்து மர்மநபர் கூறிய தொகையை அனுப்பியுள்ளார்.