தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. தென்மத்திய ரயில்வே அறிவிப்பு! - Secunderabad Ramnad special trains - SECUNDERABAD RAMNAD SPECIAL TRAINS

Secunderabad to Ramanathapuram train extend: செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது‌.

தென்மத்திய ரயில்வே அறிவிப்பு
செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 7:57 PM IST

மதுரை:தென் மத்திய ரயில்வே சார்பில், செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் செல்லும் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை, மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டிப்பதாக இன்று (ஏப்.30) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது‌. அதன்படி செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) புதன்கிழமைகளில் மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.

மறு மார்க்கமாக ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) மே 03, 10, 17, 24, 31, ஜுன் 07, 14, 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் வந்து சேரும்.

இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தென்மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பணித்தள பொறுப்பாளர்கள் ஒருமையில் பேசுவதாக ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்! - Sanitation Workers Complaint

ABOUT THE AUTHOR

...view details