தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்கள் மோதல் விவகாரத்தில் இளஞ்சிறார் சட்டத்தை மீறியதா நெல்லை போலீஸ்? - students appeared in police station - STUDENTS APPEARED IN POLICE STATION

Students Appeared In Police Station: திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் மோதல் சம்பவங்களில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது பெற்றோருடன் விசாரணைக்கு ஆஜரானதால் பெரும் பரபரப்பு நிலவியது.

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையம்
விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 10:44 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மாதம் 25, 27 ஆகிய தினங்களில் மாணவர்களிடையே சிறு தகராறு ஏற்பட்டது. மேலும், கடந்த 3 ஆம் தேதியும் மற்றொரு பள்ளியிலும் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்றைய தினம் இரு தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் இப்பகுதியில் உள்ள 4 பள்ளிகளில் மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இதுகுறித்த புகாரின் பேரில் இந்த 4 பள்ளிகளில் படிக்கும் சுமார் 30 மாணவர்களை அவர்களின் பெற்றோருடன் விக்கிரமசிங்கபுரம் போலீசார் காவல் நிலையம் வரவழைத்தனர். ஒரே நாளில் மாணவர்கள் பெற்றொர்களுடன் காவல் நிலையம் முன் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து போலீசார் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே இம்மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், இராதாபுரம் பகுதிகளில் மாணவர்கள் மோதல் சம்பவங்களில் ஈடுபடுவது அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில், ஒரே நாளில் சுமார் 30 மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் இளம்சிறார் ஆவர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் விசாரணை செய்யும் பொழுது அவர்களை தனிப்பட்ட இடத்தில் விசாரணை செய்ய வேண்டும் மற்றும் காவலர் சீருடையில் விசாரணை செய்யக்கூடாது. காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லக்கூடாது என பல சட்டங்கள் இருக்கும் நிலையில், இன்று சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை நேரடியாக விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அவர்களை தனிப்பட்ட முறையில் தான் விசாரணை செய்ய வேண்டும். இப்படி காவல்துறை தனது வரம்பை மீறி இருக்கக்கூடாது என தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "பள்ளி மாணவர்கள் சண்டையை சாதி சண்டையாக மாற்ற வேண்டாம்" - சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தல்! - Speaker APPAVU ABOUT CASTE ATTACK

ABOUT THE AUTHOR

...view details