தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில் 48 வட்டங்களிலும், கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்று மாசி மகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த மாசி மக பெருவிழாவில் தொடர்ந்து 3 நாட்கள் இரவு பகலாகச் சுமார் 508 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிய நிலையில், ஒரே நாளில் மட்டும் 250 மெட்ரிக் டன் குப்பைகளைச் சுத்தம் செய்து சுகாதாரத்தைப் பேணிக் காத்தனர்.
கும்பகோணம் மாநகரில் இதே தூய்மைப் பணியாளர் 76 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றுவது தான் வழக்கம். ஆனால் இவர் ஒரே நாளில் 250 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே, இவர்களைப் பாராட்டும் விதமாக அனைவருக்கும் 500 ரூபாயும், பாராட்டு நற்சான்றிதழையும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவன பங்களிப்புடன் எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன் இன்று வழங்கினார்.