தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மூப்பனார் கொள்கைக்கு முரண்".. ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமாகா முக்கிய நிர்வாகிகள்! - edappadi palaniswami

TMC members joined AIADMK: தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், தமாகாவிலிருந்து விலகிய சேலம் மாவட்ட நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைந்தனர் தமாகா முக்கிய நிர்வாகிகள்
அதிமுகவில் இணைந்தனர் தமாகா முக்கிய நிர்வாகிகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 5:08 PM IST

அதிமுகவில் இணைந்தனர் தமாகா முக்கிய நிர்வாகிகள்

சேலம்:நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அசோகன், தமாகா - பாஜகவுடன் கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை என்று கூறி, கட்சியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 30க்கும் மேற்பட்டோர் தமாகாவிலிருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் காளிமுத்து தலைமையில், அவரது மனைவி கல்பகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாத்தி காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

கட்சியில் இணைந்தவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறினார். இதனிடையே, அதிமுகவில் இணைந்த காளிமுத்து கூறுகையில், மூப்பனார் கொள்கைக்கு முரணாக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டதாக தெரிவித்தனர்.

மேலும், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கூட்டணி குறித்து ரகசிய வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
அப்போது பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிற்கு ஆதரவாகவே பேசிய நிலையில், பாஜகவுடன் கூட்டணி அறிவித்திருப்பதால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுக இருக்காது எனக் கூறிய பலர் காணாமல் போயுள்ளனர்.. பிரதமருக்கு கனிமொழி பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details