சேலம்: தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு நீக்க வேண்டும் என்று சேலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் மீண்டும் தொடராமல் இருக்க, அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சேலத்தில் விவசாயிகள் கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவியுடன் கோரிக்கை வைத்தனர். மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், லட்சக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கள்ளு இறக்க விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தங்கராஜ் அளித்த பேட்டியில், "30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் கள்ளு இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாக தெரிவித்தார்.