சென்னை: கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது "நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை" என பத்திரிக்கைகளில் முழு பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது என்றும், கடந்த 15 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக விளம்பரங்களுக்காக செலவு செய்தது எவ்வளவு? மக்களின் வரிப்பணம் எவ்வளவு அரசு பணம் செலவிடப்பட்டது? என சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் இளங்கோ தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்கள் தொடர்புத்துறையிடம் கேள்வி எழுப்பினார்.
ஆனால், கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காததால் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு 2015ல் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விசாரணை தலைமை செயலாளராக இருந்து ஓய்வுக்கு பின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட கே.எஸ் ஶ்ரீபதி மற்றும் நீதிபதியாக இருந்து ஓய்வுக்கு பின் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட எஸ்.எப் அக்பர் முன்பு 2015ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் அரசு அலுவலகங்களில் அமர்ந்து பேசுவது தவறில்லை என இருக்கையில் அமர்ந்து ஆணையரின் கேள்விக்கு இளங்கோ பதிலளித்துள்ளார். ஆனால், ஆணையத்தில் எழுந்து நின்று தான் பேச வேண்டும், அமர்ந்து பேச கூடாது என தலைமை தகவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதற்கு, எழுந்து நின்று பதிலளிக்க முடியாது என இளங்கோ மறுப்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க:'அண்ணாமலை ஓடிப்போனவர்'.. கள்ள உறவில் திமுக - பாஜக... விளாசும் காயத்ரி ரகுராம்!