தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ.எஸ்.ஆர் எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் விடுவது தொடர்பான விதிகளில் தளர்வு! - rules relaxed on OSR

Rules relaxed on OSR: வரன்முறை செய்யப்படும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், ஓ.எஸ்.ஆர் எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் விடுவது தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஓ.எஸ்.ஆர் எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் விடுவது தொடர்பான விதிகளில் தளர்வு
ஓ.எஸ்.ஆர் எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் விடுவது தொடர்பான விதிகளில் தளர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 7:08 PM IST

சென்னை:வரன்முறை செய்யப்படும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில் ஓ.எஸ்.ஆர் எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் விட முடியாத இடங்களில், அதற்கு ஈடாக பணம் செலுத்தலாம் என வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கும் போது, அதில் 10 சதவீத நிலம் திறந்த வெளி ஒதுக்கீடாக விடுவது கட்டாயம். ஆனால், அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில் இந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு இருக்காது. இத்தகைய மனைப் பிரிவுகள் தற்போது வரன்முறை செய்யும் போது, திறந்தவெளி ஒதுக்கீடாக, 10 சதவீத நிலத்தை ஒதுக்க கட்டாயப்படுத்தப்படுகிறது. இதில் ஏற்கனவே பெரும்பாலான மனைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், திறந்தவெளி ஒதுக்கீடாக விடப்படும் நிலத்தின் அளவு, அமைப்பு பொது நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இது தொடர்பாக வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில், “வரன்முறை திட்டத்துக்கு வரும் சிறிய அளவிலான மனைப் பிரிவுகளில், திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் தொடர்பாக சில நடைமுறை சிக்கல்கள் தெரிய வந்தன.

இதில் 50,819 சதுர அடி வரையிலான விற்பனையாகாத மனைகள் உள்ள திட்டங்களில், திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் விட முடியாத இடங்களில், அதற்கு ஈடாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும். இதன்படி, 10 சதவீத நிலத்துக்கு, வழிகாட்டி மதிப்பு அடிப்படையிலான தொகையைச் செலுத்தினால் போதும். இதற்கு மேற்பட்ட பரப்பளவுள்ள திட்டங்களில், 10 சதவீத நிலத்தை ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாமக வேட்பாளர் கார் பறிமுதல் முயற்சி? போலீசாருடனான வாக்குவாதத்தால் பரபரப்பு! - PMK Candidate Car Seizing

ABOUT THE AUTHOR

...view details