தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூலி தொழிலாளியின் மனைவியின் பெயரில் நடந்த ரூ.4.46 கோடி வரிஏய்ப்பு மோசடி.. ஆம்பூரில் நடந்தது என்ன? - Tax Evasion Scam - TAX EVASION SCAM

Tax Evasion Scam In Ampur: ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிற்சாலை பணியாளரின் மனைவியின் ஆவணங்களை சிலர் தவறாக பயன்படுத்தி 4.46 கோடி ரூபாய் வரிஏய்ப்பு மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடி சம்மந்தமான குறுஞ்செய்தி மற்றும் பாதிக்கப்பட்ட தம்பதியர்
மோசடி சம்மந்தமான குறுஞ்செய்தி மற்றும் பாதிக்கப்பட்ட தம்பதியர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 6:42 PM IST

Updated : Jul 20, 2024, 7:35 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஜட்ஜ் மனை பகுதியைச் சேர்ந்தவர் நியாஸ் அஹமத். இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவரது மனைவி முபீனா பஜீலூர் ரஹ்மான் மௌலாவின் வங்கிக் கணக்கில் இருந்து 4 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 496 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளியின் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த முபீனா பஜீலூர் ரஹ்மான் மௌலா மற்றும் அவரது கணவர் நியாஸ் அஹமது வங்கி மற்றும், ஜிஎஸ்டி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, முபீனா பஜீலூர் ரஹ்மான் மௌலா என்பவரின் பெயரில் உள்ள ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி, MRK எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் போலியான நிறுவனம் நடத்தி ரூ.4 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 496 வரிஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, உடனடியாக இதுகுறித்து முபீனா பஜீலூர் ரஹ்மான் மௌலா தனது கணவர் நியாஸ் அஹமதுவுடன் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், இந்த மோசடி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்க ஆம்பூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நியாஸ் அஹமது கூறுகையில், "நான் தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறேன். எனது மனைவிக்கு அவ்வளவாக வங்கி பணப் பரிவர்த்தனை பற்றி ஏதும் தெரியாது. ஆனால், எனது மனைவியின் ஆவணங்களை சிலர் தவறாகப் பயன்படுத்தி 4 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 496 ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இதன் காரணமாக, எனது மனைவிக்கு வரும் மகளிர் உரிமை தொகையையும் வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே, இதுகுறித்து உடனடியாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த நிலையில், கூலி வேலைக்கு செல்லும் நபர்களை குறி வைத்து பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:“உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கு முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்” - அமைச்சர் துரைமுருகன்!

Last Updated : Jul 20, 2024, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details