தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். முதலில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து வளிமண்டலத்தை ஆய்வு செய்ய ரோகிணி 6 H 200 (Rohini sounding rocket) என்ற சிறிய ரக ராக்கெட், இன்று (பிப்.28) மதியம் 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
குலசையின் முதல் ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ரோகிணி! - ரோகிணி ராக்கெட்
Kulasekaranpattinam: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ரோகிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
குலசேகரன்பட்டினம்
Published : Feb 28, 2024, 2:18 PM IST
இந்த ரோகிணி ராக்கெட் சீறிப்பாய்ந்து, விண்ணில் 75.24 கி.மீ உயரம் சென்று, பின்னர் 121.42 கி.மீ தூரம் சென்று கடலில் விழுந்தது. ரோகிணி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அனைவரும் கைதட்டி உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக, ரோகிணி ராக்கெட் ஏவப்படுவதையொட்டி, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.