மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று (ஏப்.6) நடைபெற்றது. மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சி அடிக்க இன்று(ஏப்.7) முதல் முன்பதிவு தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க இன்று முதல் 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.