வேலூர்:நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 5 லட்சத்து 68 ஆயிரத்து 692 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக பாஜக சார்பில் போட்டியில் ஏ.சி சண்முகம் 3 லட்சத்து 52 ஆயிரத்து 990 வாக்குகள் பெற்றிருந்தார்.
அதாவது, மொத்தம் பதிவான வாக்குகளில் 31.25 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார் ஏ.சி சண்முகம். இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வேலை செய்யவில்லை எனவும், வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த பிரச்சனை உள்ளதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "6 தொகுதிகளுக்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த ஒரு இயந்திரத்தை ஏ.சி சண்முகம் தரப்பை சேர்ந்தவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பரிசோதனை செய்யும் போது அதில் பதிவான வாக்குகளை அழித்துவிட்டு சோதனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.