தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்தியாளரிடம் ஆபாசமாக பேசிய கிருஷ்ணசாமி.. மன்னிப்பு கேட்க பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்! - KRISHNASAMY INSULTED Journalists - KRISHNASAMY INSULTED JOURNALISTS

Krishnasamy Insulted Reporter Issue: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளரை ஆபாசமாக பேசியதால், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 4:40 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் பாலக்காடு சாலை குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கொல்கத்தா மருத்துவ முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். எப்போது நள்ளிரவில் பெண் தைரியமாக நடந்து செல்ல முடிகின்றதோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் என காந்தி சொல்லி இருக்கின்றார்.

கிருஷ்ணசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கொல்கத்தா சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கபட்டுள்ளனர். கொல்கத்தாவில் சட்டம் - ஒழுங்கு இருக்கின்றதா என்ற சந்தேகம் இருக்கின்றது. மாநில அரசிடம் இருந்து சட்டம் - ஒழுங்கை சிறிது காலம் மத்திய அரசு கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிபிஐ விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை கடந்த 1929ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றார்கள். அவர்களின் குத்தகை 2028ஆம் ஆண்டு நிறைவடைகிறது. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் அங்கிருக்கின்றனர். கம்பெனிதான் வெளியேற வேண்டுமே தவிர, மக்கள் அல்ல. கம்பெனி மூலமாக மக்களை வெளியேற்றும் முயற்சி நடக்கின்றது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அங்கேயே இருந்து வனத்தைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கின்றேன். மாநில அரசு இதை கௌரவ பிரச்னையாக எடுத்துக் கொள்ள கூடாது.

வால்பாறை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, ஏற்காடு என பல பகுதிகளில் இந்த மாதிரி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர். இதை கருத்தில் எடுத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். மத்திய அரசின் துறைகளில் 22 சதவீத ஒதுக்கீடு, மாநில அரசில் 19 சதவீத இட ஒதுக்கீடு தாழத்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு வழங்ப்படுகின்றது. தமிழகத்தில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு கடைநிலை அரசுப் பணிகளில் மட்டுமே கொடுக்கப்படுகின்றது.

ஏ, பி பிரிவு அரசுப் பணிகளில் 3 சதவீதம் கூட நிரப்பபடவில்லை. அதை நிரப்புவதற்கு பதிலாக அருந்ததியினருக்கு உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமாக அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து முன்னுரிமை கொடுத்து அருந்ததியினர் மட்டுமே பட்டியல் இன இடங்களை நிரப்பி விட்டனர். இதை அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கிரிமிலேயர் பிரச்னைகள் இருக்கின்றது. பட்டியல் இன சமூகத்தில் உள்ள 3 சமுதாயப் பிரதிநிதிகளை அழைத்து தமிழக முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். இதில் பிரச்னைகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

முன்னதாக, இட ஒதுக்கீடு தொடர்பாக கிருஷ்ணசாமியிடம் கேள்வி எழுப்பிய தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை ஆபாசமாக பேசியதால் அங்கிருந்த சக செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் ஆபாச பேச்சுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக உடனடியாக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:நாளை ஆற்காடு சுரேஷின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி.. பெரம்பூரில் குவியும் காவல்துறை! - arkadu suresh 1st memorial tribute

ABOUT THE AUTHOR

...view details