தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்காவிட்டாலும் அதிமுகவுக்கு ஆதரவு… புரட்சி பாரதம் கட்சி முடிவு! - lok sabha elections admk - LOK SABHA ELECTIONS ADMK

Puratchi Bharatham Katchi: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்காவிட்டாலும் அதிமுகவுக்கு ஆதரவு
நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்காவிட்டாலும் அதிமுகவுக்கு ஆதரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 8:24 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்காவிட்டாலும் அதிமுகவுக்கு ஆதரவு… புரட்சி பாரதம் கட்சி முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்குத் திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் புரட்சி பாரதம் கட்சிக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாததால் புரட்சி பாரதம் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார்.

தற்போது தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி பேசுகையில், "தங்களுக்கு நாடாளுமன்றத் தொகுதியில் இடம் ஒதுக்காத நிலையில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததில் 90 சதவீதம் தொண்டர்கள் அதிமுகவுடன் பயணிக்கலாம் என கூறினர்.

இதனையடுத்து தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்ததின் பேரில் தற்போது ஆதரவு அளித்துள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற அதிமுகவினருடன் இணைந்து புரட்சி பாரதம் கட்சியை நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என கூறினார்.

மேலும் அதிமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாகப் பாடுபடுவோம். இன்னும் மூன்று நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் பகுதிக்குப் பிரச்சாரத்திற்கு வர உள்ளதால் அவரில் நேரில் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார். புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்.

அதிமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடச் சீட்டு கிடைக்காததால் கோபத்திலிருந்து வந்தோம். நாங்கள் உடனடியாக தனித்து நின்று போட்டியிடக் கால அவகாசம் இல்லை. ஆரம்பத்திலேயே எங்களுக்கு சீட் இல்லை என்று கூறி இருந்தால், தனித்துப் போட்டியிடத் தயாராகி இருப்போம்.

இன்று முதல் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுகவினருடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி தொண்டர் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு கோயிலும் எத்தனை பசுக்களைத் தானமாகப் பெறலாம் என வரம்பு நிர்ணயிக்கலாம் - நீதிபதிகள் கருத்து! - Cattle Donation Case

ABOUT THE AUTHOR

...view details