தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

ETV Bharat / state

“பலமுறை மனுக்கள் கொடுத்தும் தீர்வு இல்லை!”- மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக பட்டியலின மக்கள் நூதன போராட்டம்! - PUDHUKOTTAI CASTE ISSUE

புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தியடிப்பட்டி மேற்கு தெரு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் அதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இதுவரை அளித்த மனுக்கள், செய்தி வெளியீடுகளை பேனர் போல் அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பதாகை மற்றும் ஆத்தியடிப்பட்டி மேற்கு தெரு கிராமத்தின் குடிநீர் குழாய், சாலை, மின்சார பெட்டி
பதாகை மற்றும் ஆத்தியடிப்பட்டி மேற்கு தெரு கிராமத்தின் குடிநீர் குழாய், சாலை, மின்சார பெட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் பல்லவராயன்பத்தை ஊராட்சி ஆத்தியடிப்பட்டி மேற்கு தெரு கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட பட்டியலின பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இடுகாடு, குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இதுசம்பந்தமாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, தாங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் கோரிக்கை வைத்தும் இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:கே.வி.குப்பம் அருகே இருதரப்பு மோதலால் உடைக்கப்பட்ட கோயில்.. மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை! -

அதனை நினைவூட்டும் வகையில் நூதன முறையில் அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட மனுக்களின் புகைப்படங்களஅ மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் புகைப்படங்களை ஒன்றிணைத்து கறம்பக்குடி - ஆலங்குடி சாலை புதுப்பட்டியில் பதாகை அமைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details