சென்னை:தேமுதிக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எல்கே சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளருமான சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி. இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் சந்தோஷ் சர்மா என்பவரிடம் சென்னை மாதவரத்தில் கட்டிய 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், 78 வீடுகளை வாங்குவதற்காக பல கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முடித்தவுடன் அவர்கள், பூர்ண ஜோதியிடம் போட்ட ஒப்பந்தத்தின் படி வீடுகளை ஒதுக்காமல் சுமார் 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த பூரண ஜோதி இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.