தென்காசி: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில், ராணுவம், துணை ராணுவப்படை வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஊடகத்தினர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்படுகிறது.
அந்த வகையில், வெளி மாவட்டத்திலிருந்து வந்து தென்காசி மாவட்டத்தில் வேலை பார்க்கும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து இன்று(ஏப்.10) காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.