தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு! பெண் செய்த காரியத்தால் ஸ்தம்பித்த பேருந்து நிலையம்! - Pollachi woman seat protest

பொள்ளாச்சியில் பேருந்தினுள் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் செய்த காரியம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Etv Bharat
Pollachi Bus Stand issue (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Sep 9, 2024, 6:51 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திக் இருந்து நாள்தோறும் கோவைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். காலை வேளை என்பதால் கல்லூரி மாணவர்களும் பணிக்கு செல்வோர்களும் ஏராளமானோர் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக கூட்டமாக காத்திருப்பது வழக்கம்.

இந்நிலையில், பேருந்து நிலையத்திற்கு உள்ளே வந்த கோவை செல்லும் தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது சிலர் முண்டியடுத்துக் கொண்டு இருக்கைக்காக தங்கள் கையில் இருக்கும் பை உள்ளிட்ட பொருட்களை சீட்டின் மீது போட்டு இடம் பிடித்துள்ளனர்.

இதில் கோவை பகுதிக்கு வேலைக்கு செல்லும் இந்துஜா என்ற இளம் பெண் இதேபோல இருக்கைக்காக தன் பையை பேருந்து இருக்கை மீது போட்டுள்ளார். பேருந்து நின்றவுடன் மேலே ஏறி பார்த்த போது அந்த இருக்கையில் வேறு ஒரு கல்லூரி மாணவி அமர்ந்திருந்தது இந்த பெண்ணிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றி போனதில் ஆத்திரமடைந்த இந்துஜா, பேருந்து முன்பு அமர்ந்து இருக்கைக்காக போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அந்தப் பெண்ணை வேறு ஒரு பேருந்தில் ஏற்றி இருக்கையில் அமர வைத்து அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் திடீர் தர்ணா போராட்டத்தால் உரிய நேரத்திற்கு கிளம்ப வேண்டிய பேருந்துகள் அனைத்தும் தாமதமாகவே புறப்பட்டன. இதனால் பயணிகள் மன உளச்சலுக்கு ஆளாகினர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதையும் படிங்க:சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள்: செப்.11 துவக்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி! - junior athletics championship

ABOUT THE AUTHOR

...view details