தேனி:தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நகை கடை நடத்தி வருபவர் செந்தில்குமார். இவர் கடை முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையில் விற்பனை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் உள்ளே பாம்பு செல்வதை அருகில் இருந்த பூக்கடை நடத்தி வரும் பெண் ஒருவர் பார்த்துள்ளார்.
இதனையடுத்து, இது குறித்த தகவலை செந்தில்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேனி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வாகனத்தில் புகுந்த பாம்பினை வெளியேற்றுவதற்காக ஸ்பிரே அடித்துள்ளனர். ஸ்பிரே அடித்தும் பாம்பு வெளியில் வராத நிலையில், இருசக்கர மெக்கானிக்கின் உதவியுடன் பேனட்டை கழட்டி சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளனர்.