தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகாத உறவில் பிறந்த குழந்தை.. ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த கொடூரத் தாய்.. திருவாரூர் பகீர் சம்பவம்! - JUVENILE PROTECTION ACT

திருவாரூரில் பிறந்து 10 மாதங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உட்பட மூவர் மீது இளஞ்சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 10:44 PM IST

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயது மதிக்கத்தக்க பெண். இவருக்கு திருமணமாகி 14 வயதில் ஆண் குழந்தையும், 13 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவரது கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இப்பெண்மணி அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், பெண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பானது திருமணத்திற்கு மீறிய உறவு வரை சென்றுள்ளது. இந்த உறவின் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இப்பெண்மணிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு தனக்கு தெரிந்த நபரிடம் விற்றுத் தருவதாக, இப்பெண் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளர் கூறி உள்ளார். இதனையடுத்து இக்குழந்தையை திருவாரூரில் வசிக்கும் மற்றோரு நபருக்கு வீட்டின் உரிமையாளர் விற்று உள்ளார்.

இதையும் படிங்க :பேருந்து நிலைய கழிவறையில் கிடந்த பச்சிளம் குழந்தை.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

குழந்தை விற்கப்பட்டதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 1098 சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்ததையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். பின்னர் வலங்கைமான் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் காவல் நிலையத்தில் குழந்தையின் தாய், வீட்டின் உரிமையாளர், குழந்தையை வாங்கிய நபர் ஆகியோர் மீது இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் தாண்டிய உறவில் பிறந்த 10 மாதமே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details