கோயம்புத்தூர்:வடவள்ளி சேர்ந்த காமராஜ் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருக்கின்ற நிலையில் அவர்களை சந்திக்க ஈஷா அனுமதி மறுப்பதாக தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை அடுத்து கடந்த 30 ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஷா யோகா மையத்தின் மீது பதியப்பட்ட வழக்குகள் மற்றும் வழக்குகளின் நிலை குறித்தான அறிக்கையை வருகின்ற 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென காவல்துரைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க:சிறுமிகளுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை? குற்றச்சாட்டும், ஈஷா விளக்கமும்!
அதன் அடிப்படையில் ஈஷா யோகா மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 6 குழுக்களாக ஆக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஷா யோகா மையத்தில் இதுவரை தங்கி இருத்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? பெண்கள் எத்தனை பேர் துறவறம் பூண்டுள்ளனர் ? வெளிநாட்டினர் எத்தனை பேர் உரிய ஆவணத்துடன் தங்கி இருக்கின்றனர்? ஈஷா யோகா மையத்திற்கு வந்த பிறகு காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? அண்மையில் ஈஷா யோகா மையத்தில் உயிரிழந்தது யார்? எப்படி உயிரிழந்தார்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்