தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடைபயிற்சி சென்ற இளைஞர் அரிவாளால் வெட்டி கொலை..முன்விரோதம் காரணமா? - Chengalpattu youth murder - CHENGALPATTU YOUTH MURDER

செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை நடைபயிற்சி சென்ற இளைஞரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலைக்கு முன்விரோதம் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு காவல் நிலையம், உயிரிழந்த சரவணன்
செங்கல்பட்டு காவல் நிலையம், உயிரிழந்த சரவணன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 9:07 PM IST

சென்னை: செங்கல்பட்டு அருகே நடைபயிற்சி சென்றவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் காந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகில் சரவணன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரவணனின் தலை மற்றும் முதுகு பகுதிகளில் சரமாரி வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:தம்பியை கிண்டல் செய்ததால் சக மாணவனை பிளேடால் கீறிய மாணவன் கைது!

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே நடைபயிற்சி சென்ற வாலிபர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details