தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு செய்து ஒத்திகை.. 4 பேர் கைது! - country bomb blast in tambaram - COUNTRY BOMB BLAST IN TAMBARAM

Country bomb in Tambaram: தாம்பரம் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்து ஒத்திகையில் ஈடுபட்டபோது, பக்கத்து வீட்டின் கூரை மேல் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

country bomb in tambaram
country bomb in tambaram

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 7:03 PM IST

சென்னை:சென்னை, தாம்பரம் அடுத்த கடப்பேரி குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் ஷாலினிக்கு குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆன நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, திடீரென பலத்த வெடி சத்தத்துடன் வீட்டின் மேற்கூரை சிதறிய நிலையில், பதற்றமடைந்த ஷாலினி, கூச்சலிட்டபடி வெளியே ஓடி சென்றுள்ளார்.

ஷாலினியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில், வீட்டு கூரை மேல் வெடிகுண்டு வீசியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் பிரபல வழிப்பறி கொள்ளையர் கோல்டன் மணி என்பவர், ஷாலினி மற்றும் அவரது தந்தையிடம், தான் தெரியாமல் வெடிகுண்டு வீசியதாகக் கூறி வீட்டின் கூரையை மாற்றுவதற்கு பணத்தையும் வழங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், கடப்பேரி பகுதியைச் சேர்ந்த கோல்ட் மணி (21), நாட்டு வெடிகுண்டு தயாரிக்க உடந்தையாக இருந்ததாக, அவரது நண்பர்கள் பால் சூர்யா (24), ஸ்ரீதர் (20) மற்றும் வெங்கடேசன் (22) ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரனையில் பட்டாசு மருந்து, களிமண், கற்கள் ஆகியவற்றைக் கொண்டு முதல் முறையாக வெடிகுண்டு தயாரித்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:“உச்ச நீதிமன்றம் இதுவரை இவ்வளவு கேவலமாக பேசியதில்லை” - ஆளுநர் விவகாரத்தில் துரைமுருகன் கருத்து! - Duraimurugan About RN Ravi

ABOUT THE AUTHOR

...view details