தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 5:30 PM IST

ETV Bharat / state

மனைவியைக் கொலை செய்த கணவன்.. 3 மணி நேரத்தில் சுற்றி வளைத்த போலீசார்! - Husband killed his wife

Husband killed wife: சோளிங்கர் அருகே கணவர் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தப்பியோடிய நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இறந்த சந்தியா மற்றும் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ்
சந்தியா மற்றும் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

ராணிப்பேட்டை:திருவள்ளுவர் மாவட்டம், ஆர்கே பேட்டை ஒன்றியம் அம்மையார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். ஆட்டோ ஓட்டுநரான இவர், ராணிப்பேட்டை, சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா (22) என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ஓம்பிரகாஷ் மாமியார் வீடான பாணாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், மனைவி சந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ் மனைவி சந்தியாவை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர், பாணாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் பாணாவரம் போலீசார், இறந்த சந்தியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், ஓம்பிரகாஷ் வாலாஜாவில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாணாவரம் போலீசார் வாலாஜா காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, வாலாஜா போலீசார் அவரை பின் தொடர்ந்த நிலையில், அவர் சோளிங்கர் செல்லும் சாலையில் வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில், சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே முகாமிட்டிருந்த தனிப்படையினர், அங்கு மறைந்திருந்த ஓம்பிரகாஷை மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஒரு லட்சம் கன அடியை நெருங்கும் ஒகேனக்கல் காவிரி.. சுற்றுலாப் பயணிகள் வர தடை! - HOGENAKKAL CAUVERY RIVER

ABOUT THE AUTHOR

...view details