தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1.90 கோடி ஹவாலா பறிமுதல்; 2 பேரிடம் விசாரணை! - two people smuggled hawala money

Hawala money: கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 1.90 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Police are interrogating two people smuggled hawala money from Coimbatore to Kerala
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா கடத்தல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 1:46 PM IST

கோயம்புத்தூர்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே குருடிக்காடு என்ற இடத்தில், பாலக்காடு போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த இன்னோவா காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி உள்ளனர்.

ஆனால் கார் நிற்காமல் வேகமாகச் செல்லவே, அந்த காரை ஜீப்பில் விரட்டிச் சென்று போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அப்போது காரில் இருவர் இருந்த நிலையில், வாகனத்தை போலீசார் சோதனையிட்டுள்ளனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் இருக்கைக்கு கீழே ரகசிய அறை அமைத்து, அதில் 1.90 கோடி ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம், மலப்புரம் அங்காடிப்புரத்தைச் சேர்ந்த முகமதுகுட்டி மற்றும் புத்தனங்காடியைச் சேர்ந்த முகமதுநிசார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கோவையில் இருந்து ஹவாலா பணத்தை மலப்புரம் பகுதியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து, கோவையில் இருந்து ஹவாலா பணத்தை கொடுத்தவர், மலப்புரத்தில் பணத்தைப் பெறுபவர்கள் குறித்து பாலக்காடு மாவட்டம் கஸ்பா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல் 2 பேரிடம் போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details