தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான சாகச நிகழ்ச்சி: ஸ்தம்பித்த சென்னை! மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த ரயில் நிலையங்கள் - chennai Velachery railway station - CHENNAI VELACHERY RAILWAY STATION

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க வந்த லட்சக்கணக்கான பொதுமக்களால் வேளச்சேரி ரயில் நிலையில் ஸ்தம்பித்தது.

வேளச்சேரி ரயில் நிலையத்திக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்
வேளச்சேரி ரயில் நிலையத்திக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2024, 5:42 PM IST

சென்னை:சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சென்னையில் நடைபெறுவதால் லட்சகணக்கான மக்கள் அதனை காண வந்தனர்.

இதனால் சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலுடன் காணபட்டது.
குறிப்பாக புறநகர் பகுதிகளில் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து நோக்கில் வேளச்சேரியில் பறக்கும் ரயில் மூலம் கடற்கரைக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதனால் ஏற்கனவே சாகச நிகழ்ச்சி காண வந்தவர்கள் மீண்டும் நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது மேலும் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வேளச்சேரி ரயில் நிலையத்திக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: மெரினாவில் மெய்சிலிர்க்கும் விமான சாகசம்: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலை மோதிய மக்கள் கூட்டம்!

அதோடு பொதுமக்கள் ரயிலில் இருந்து முண்டியடித்துகொண்டு ஒருவரையொருவர் கீழே தள்ளியபடி இறங்கியதால், பலர் லேசான காயமடைந்தனர். இதையடுத்து ரயில்வே காவலர்கள் பயணிகளை முறைபடுத்தி விபத்துக்களை தவிர்க்க முயற்சித்தனர்.ஆனால் கட்டுபடுத்த முடியாத அளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அதிகாரிகள் செய்வதறியாமல் தவித்தனர். இதனால் வேளச்சேரி ரயில் நிலையத்தில் 2 மணி நேரமாக பெரும் பரபரப்பு நிலவியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details