திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஊராட்சியில் உள்ளது பூந்தோட்ட தெரு. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக குடியிருப்புகளில் தேங்கி உள்ள தண்ணீர் அகற்றப்படாமலும், மழைநீருடன் கழிவு நிர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், வீடுகளில் பாம்பு, பூரான், தவளை, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வருவதாகவும் அப்பகுதிகள் மக்கள் புலம்புகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், வட்டாட்சியரிடமும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதிகள் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் இப்பகுதிக்கு வந்து ஊராட்சிமன்ற தலைவரும், வார்டு உறுப்பினர்களும் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடியிருப்புவாசிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டை அறைக்கு நேற்று புகார் கொடுத்த நிலையில், இன்று இப்பகுதியில் தேங்கி இருந்த நீரை வெளியேற்றி வருகின்றனர். இருப்பினும் இதே நிலை நீடித்து வருகிறது. இப்பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சரியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நமது ஈடிவி பாரத் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் பாதிக்கப்பட்ட மக்களை அணுகிய போது பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சல்சா கூறுகையில், “நாங்கள் நாற்பது ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம்.
குளம் போல் தேங்கி இருக்கும் தண்ணீர் (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:ஈரோடு: பழங்குடி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. உயிரை பணயம் வைத்து பரிசலில் சென்று உதவிய செவிலியர்!
இப்பகுதியில் தண்ணீர் வெளியே செல்வதற்கு வழி கிடையாது. தேங்கி இருக்கும் மழை நீருடன் கழிவு நீரும் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் இந்த நீர், வீட்டிற்குள் வருகிறது. இரவு நேரங்களில் பாம்பு, பூரான் போன்ற விஷ பூச்சிகள் வருகின்றன. குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் இருக்கிறது. குடிநீர் வசதி இல்லை. மழைக்காலத்தின் போது மிகவும் அவதிப்படுகிறோம். இப்பிரச்சினை தொடர்பாக ஐந்து முறை மனு அளித்துள்ளோம்.
குளம் போல் தேங்கி இருக்கும் தண்ணீர் (Credits - ETV Bharat Tamil Nadu) எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கவுன்சிலரிடமும் புகார் அளித்தோம். அந்த நேரம் மட்டும் வந்து பார்க்கின்றனர். அதன் பின் கண்டுகொள்வதில்லை. எங்கள் வீடும், நாங்களும் தண்ணீரில் மிதக்கிறோம். எங்களின் இந்த பிரச்சினைக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்பகுதியில் வீடு கட்டி குடியிருக்கும் நபர் கூறுகையில், “எங்கள் பகுதியில் கால்வாய் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளது. முதலில் அதனை கட்டி முடிக்க வேண்டும். இங்கு தேங்கி உள்ள நீர் குளம் போல் உள்ளது. இதனை மோட்டார் மூலம் அகற்ற முடியாது. அதிகப்படியான தண்ணீர் தேங்கி இருப்பதால், கொசுக்கள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக குழந்தை உள்பட ஐந்து பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக புகார் அளித்தோம். அதன் பெயரில் இரு நாட்களாக மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. இது நிரந்திர தீர்வாக இருக்காது” என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்