தென்காசி:கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காகக் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுரை வழங்கி இருந்தது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பும் அடைந்திருந்தது. நிழலுக்கு ஒதுங்குவதற்காக பலரும் மரங்களைத் தேடியும் பலரும் இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய பழங்களை மற்றும் ஜூஸ் உள்ளிட்டவற்றையும் அருந்தினர். தென்காசி மாவட்டத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது.