தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்" -எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை! - OPPOSITION LEADER

ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்கள், பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்) (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 3:03 PM IST

கிருஷ்ணகிரி:ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்கள், பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் மழை, வெள்ளசேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டா. வாகன ஓட்டிகளின் உரிமையாளர்கள், பொது மக்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்,அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஊத்தங்கரை பரசனேரி நிரம்பி வெளியேறிய மழை நீரால் அந்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐம்பதுக்கு மேற்பட்ட வாடகை, டிராவல்ஸ் மற்றும் சொகுசு கார்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்,அண்ணா நகர் பகுதியில் மழை நீரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மலை சரிந்ததால் புதைந்த வீடுகள்.. திருவண்ணாமலையில் 2வது நாளாக நடக்கும் மீட்புப்பணி

போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இரண்டு தாலுகாக்களில், ஏராளமான விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல்,கரும்பு,பருத்தி, வாழை போன்ற பயிர்கள் கடுமயாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தும் போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என அலட்சியமாக பதில் அளிக்கிறார்.பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு அவர் முறையான பதில் அளிக்க முடியாமல் உள்ளார். காரணம் அவருக்கு பேச தெரியவில்லை.

விழுப்புரத்தில் உள்ள கோலியனூர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் அப்போதே வலியுறுத்தினார். கையிலாகாத திமுக அரசு அதனை சரி செய்யவில்லை. தமிழக முதல் மு க ஸ்டாலினுக்கு, தனது மகனுக்கு என்ன பதவி தர வேண்டும். குடும்பத்தினருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று யோசனை செய்வதற்குதான் நேரம் உள்ளது,"என்று கூறினார். இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர்கள் கே,பி முனுசாமி ,கேபி அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி,ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர், ் தமிழ்செல்வம் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details